நொதேன் யுனியின் ஆரம்ப நிகழ்வு, இன்று, யாழ்ப்பாணத்தில் உள்ள விருந்தினர் விடுதியில், நடைபெற்றது.
இதில், பல்கலைக்கழக பீடாதிபதிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், நொதேன் யுனி நிர்வாகத்தினர், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, பல்கலைக்கழக கற்றல் முறைமைகள் தொடர்பிலும், விரிவுரைகள் தொடர்பிலும், பல்கலைக்கழக கற்கை நெறிகள் தொடர்பிலும், விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
அத்துடன், உள்ளூர் மற்றும் சர்வதேச மாணவர்களுக்கு, உயர்தர மற்றும் வேலை சார்ந்த இளங்கலைப் பட்டங்களை வழங்கும் நோக்குடன், 4 வருட கணினி மற்றும் வணிகப் பட்டங்களை, நொதேன் யுனி, யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்துள்ளது.
நொதேன் யுனி இன் வலுவான தொழில் தொடர்புகள், மாணவர்களுக்கு, தொழில் தொடர்புகள், பயிற்சிகள் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன.
வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் வணிகத் துறைகளில், எதிர்காலத்தில் மிகச் சிறப்பான திறன்களுடன் மாணவர்கள் பட்டம் பெறுவார்கள் என, நிகழ்வில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நொதேன் யுனி என்பது, ஒரு முழு அளவிலான வளாகம் என்பதுடன், அதி நவீன கணினி ஆய்வகங்கள், தொழில்நுட்ப வகுப்பறைகள், நவீன நூலகம் என்பவற்றுடன், கற்பித்தல் மற்றும் சிறப்பான கற்றல் சூழலை உள்ளடக்கியதாக, யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ளது.