கிளிநொச்சி – கல்மடு குளத்தின் கீழான பெரும் போக நெச்செய்கை, மடிச்சு கட்டி நோய் தாக்கம் காரணமாக முற்று முழுதாக எரிந்த நிலையில் காணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வருட பெரும்போக செய்கையிலும் இதேபோன்று பெரும் நஷ்டத்தை எதிர் நோக்கியதாகவும், இவ்வருடமும் இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அரசாங்கம் தமக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவி செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.