இன்று சூரியனின் ஒளியை சந்திரன் தடுப்பதால், வட அமெரிக்காவில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் பகல் நேரத்தில் நான்கு நிமிடங்கள் மொத்த இருளை எதிர்கொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக குறுகிய காலத்தில் ஏற்படும் இந்த நிகழ்வு குறித்து அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்வது கடினமான விடயம் என விஞ்ஞானிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
எப்படியிருப்பினும் ஆராய்ச்சியாளர்கள் கிரகணத்தின் பாதையில் விண்கலங்களை ஏவுவார்கள், மிருக காட்சி சாலைகளில் மிருகங்களின் செயல்பாடுகளை அவதானிப்பார்கள், என்பதுடன் பாரிய தொலைநோக்கிகள், கெமராக்கள் மூலம் அண்ட வெளியினை கூர்ந்து நோக்குவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படியான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள விஞ்ஞானிகளினால் மட்டுமல்லாமல் சாதாரண மக்களினாலும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.