பங்களாதேஸ் கட்டளைத்தளபதி- பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு

0
139

பங்களாதேஷின் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் அதிகாரிகள் கல்லூரியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பைசுர் ரஹ்மான் நேற்று பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.

கோட்டேஇ ஸ்ரீ ஜயவர்தனபுர பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை பாதுகாப்பு அமைச்சிற்கு வருகை தந்த பங்களாதேஷின் கட்டளைத் தளபதிக்கு பாதுகாப்புச் செயலாளரினால் வரவேற்பு வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஜெனரல் குணரத்ன மற்றும் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பைசுர் ரஹ்மான் ஆகியோரிக்கிடையில் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் இருதரப்பு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் தம்மிக்க வெலகெதரவும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டார்.