பதுளை, பசறை கோணக்கலை தோட்ட லோவர் டிவிசன் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்குள்ளான 11 பேர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெண் தொழிலாளர்கள் 10 உட்பட 11 பேரே குளவிக்கொட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று மு.ப 11.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தேயிலை மலையில் கூடுக்கட்டியிருந்த குளவிகள் கலைந்து தொழிலாளர்களை கொட்டியுள்ளது.
குளவிகொட்டுக்கு இலக்கான தொழிலாளர்களை மீட்பதற்காக சென்ற இளைஞர் ஒருவரும் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.