பட்டலந்த தொடர்பில் பேசுவோர் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற வதை முகாம்கள் பற்றிப் பேசுவதில்லை-சாணக்கியன்

0
6

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் கருத்தாடல்கள் தற்போது முன்வைக்கப்படுகின்ற போதிலும் கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற வதை முகாம்கள் தொடர்பில் எவரும் கருத்துரைப்பதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றஞ்சாட்டினார்.

சுமார் 219 வதை முகாம்கள் நாட்டில் இருந்துள்ளமைக்கான ஆதாரங்கள் காணப்படுகின்ற போதிலும் அவை தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.அவை அனைத்தும் பட்டலந்த சம்பவத்துக்குப் பல ஆண்டுகள் பின்னர் இடம்பெற்றுள்ளன.

அத்துடன் பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பிலும் தற்போதைய அரசாங்கம் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது என தங்களுக்கு நன்கு தெரியும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.

இதேவேளைஇ தொடர்ந்து அநுராதபுரம் பெண் வைத்தியர் விவகாரம் தொடர்பில் கருத்துரைத்த அவர் யுத்த காலத்தில் வடக்கு கிழக்கில் பெண்களுக்கு எதிராக இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.அவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடைய இராணுவத்துக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.