பணிப்புறக்கணிப்பை கைவிடப்போவதில்லை – GMOA

0
4

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போதிலும், நாடளாவிய ரீதியில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பை கைவிடப்போவதில்லையென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

குறித்த இந்த பணிப்புறக்கணிப்பு நாளை (13) காலை 08.00 மணி வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.