தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தனது பதவியை துறந்துள்ளார். இதேவேளை, தேர்தல் ஆணையகத்தின் தலைவர் நிமால் புஞ்சிஹேவாவும் பதவி விலகுவார் என்று எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். திருமதி சார்ள்ஸின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.