பனங்காடு ஸ்ரீ நாககாளியம்மன்
ஆலய வருடாந்த உற்சவம்

0
186

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பனங்காடு அருள்மிகு ஸ்ரீ நாககாளியம்மன்; ஆலய வருடாந்த அலங்காரத் உற்சவ திருவிழாவின் தீமிதிப்பும் தீர்த்தோற்சவமும் நேற்று பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்புடன் நடைபெற்றது.

ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ நடராஜா சதீஸ்வரக்குருக்களின் தலைமையிலான பூஜை வழிபாடுகளோடு ஆலய வழிபாட்டு பிரதான கிரியைகள் யாவற்றையும் ஆலய பிரதமகுரு சிவசக்தி உபாசகர் தேவிகாண வினோதன் சிவஸ்ரீ வி.நடராஜா நடத்தியதுடன் திருச்சடங்கினை சிவத்திரு இ.யோகானந்தம் உள்ளிட்ட பிரதம குருமார்களாலும் உதவி பூசகர்களாலும் நடாத்தி வைக்கப்பட்டது.

பக்தர்களுக்கு நோர்ப்பு நூல் கட்டப்பட்டடு மஞ்சட் குளிக்கும் கிரியைகள் தில்லையாற்றில் இடம்பெற்றதுடன் அம்மனுக்கான விசேட பூஜைகள் இடம்பெற்றதை தொடர்ந்து தீமிதிப்பு ஆரம்பமானது.

கடந்த வருடங்களை விட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெருந்திரளான பக்தர்கள் தீமிதிப்பில் கலந்து கொண்டதை காண முடிந்தது.

ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ நடராஜா சதீஸ்வரக்குருக்களின் தலைமையிலான பூஜை வழிபாடுகளோடும் தில்லையாற்றில் ஆரம்பமான நாககாளியம்மன்;; தீர்த்தோற்சவத்தை ஆலய பிரதமகுரு சிவசக்தி உபாசகர் தேவிகாண வினோதன் சிவஸ்ரீ வி.நடராஜா உள்ளிட்ட ஆலய அறங்காவலர்கள் உற்சவகாலகுருமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு நடாத்தி வைத்தனர்.

கணபதி ஹோமம் மற்றும் திருக்கதவு திறத்தலுடன் கடந்த 29ஆம் திகதி ஆரம்பமான திருச்சடங்கில் நேற்று பக்தி ததும்பும் தீமிதிப்பு மற்றும் தீர்த்தோற்சம் நடைபெற்றதுடன் இன்று பூங்காவனத்திருவிழாவும் 16ஆம் திகதி இடம்பெறும் எட்டாம் சடங்குடனும் வருடாந்த உற்சவம் நிறைவுறும்.