பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

0
100

தென்மேற்கு பசுபிக்கில் அமைந்துள்ள தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது.

நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்து தெருக்களில் தஞ்சமடைந்தனர்.

பப்புவா நியூ கினியாவின் தலைநகரான போர்ட் மார்ஸ்பை நகரில் இருந்து 443 கிலோ மீற்றர் வடக்கில் இன்று காலை 6.19 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக, அந்நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.