மிக மோசமான உள்ளடக்கங்களை கொண்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அனைவரும் நிராகரிக்க வேண்டும் என, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதி தவிசாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
மட்டக்களப்பு காத்தான்குடியிலுள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமையலுவலகத்தில், இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.