30 C
Colombo
Sunday, November 10, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பயங்கரவாத தடுப்புச்சட்டம் மற்றும் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் தொடர்பில், மட்டக்களப்பில் செயலமர்வு

இலங்கையில் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத தடுப்புச்சட்டம் மற்றும் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் தொடர்பில் அறிவுறுத்தும் செயலமர்வு இன்று
மட்டக்களப்பில் நடைபெற்றது.
கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில், கிழக்கு அபிவிருத்தி ஒன்றியத்தின் பணிப்பாளர் புஹாரி செயலமர்வு நடைபெற்றது.
சிரேஸ்ட சட்டத்தரணியும் மனித உரிமை செயற்பாட்டாளருமான பவானி பொன்சேகா, மட்டக்களப்பு மாவட்ட மனித உரிமை ஆணைக்குழுவின் பணிப்பாளர்
இஸ்ஸடீன் உட்பட பலர் வளவாளர்களாகக் கலந்தகொண்டனர்.
சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள்,ஊடகவியலாளர்கள்,மதத்தலைவர் என பல்வேறு தரப்பினரும் கருத்தரங்கில் பங்கேற்றனர்.
அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடுப்புச்சட்டம் மற்றும் சமர்ப்பிக்கப்படவுள்ள நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் தொடர்பில்
பல்வேறு கருத்துரைகள் வழங்கப்பட்டன.
சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டங்கள் தொடர்பில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மதத்தலைவர்கள்,ஊடகவியலாளர்களின் கருத்துகளும் பெற்றுக்கொள்ளப்பட்டன.
இந்த சட்டத்தினால் சிறுபான்மை சமூகம் எதிர்கொள்ளும் பாதிப்புகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன் சட்ட மூலத்தினை நிறைவேற்றாமல் தடுப்பதற்கு
முன்னெடுக்கவேண்டிய வழிவகைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles