பரதநாட்டியத்தை இழிவுபடுத்தி பேசிய மதகுருவிற்கு சட்ட நடவடிக்கை எடுக்க கோரி அராலியில் போராட்டம்!

0
111

தமிழர்களின் புனிதமான கலாச்சார கலைகளில் ஒன்றான பரதநாட்டியத்தினையும் அதை பயிற்சி செய்பவர்களையும் மிகவும் இழிவுபடுத்தும் விதமாக பேசிய இஸ்லாமிய மதகுரு அப்துல் ஹமீட் அவர்களிற்கு எதிராக அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி இன்றைய தினம் யாழ்ப்பாணம் அராலி பகுதியை சேர்ந்த பரதம் கற்கும் மாணவ, மாணவிகளும் அவர்களின் பெற்றோர்களும், உருத்திர சேனையினரும் இணைந்து கண்டன போராட்டம் ஒன்றை நடாத்தினர்,

குறித்த போராட்டத்தில் சிவசேனையின் முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர். தமிழர்களுடைய பாரம்பரிய கலைகளை இழிவுபடுத்துபவர்களுக்கு தமிழ் மொழி பேச அருகதை இல்லை என்பதை அவர்கள் எப்போதும் மனதில் வைத்திருக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டோரால் தெரிவிக்கப்பட்டது.