தமிழ் தேசிய கூட்டமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் பருத்தித்துறை நகர சபையின் தவிசாளர் தனது பதவியை இன்று காலை திடீரென ராஜினாமா செய்துள்ளார்
இன்றைய தினம் பருத்தித்துறை நகர சபையின்2023 ம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்பு இடம்பெற உள்ள நிலையில் அவர் திடீரென தனது ராஜினாமாவினை அறிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மற்றும் ஏனைய கட்சியினர் தனது பாதீட்டுக்கு எதிர்த்து வாக்களிக்க உள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து தான் ராஜினாமா செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்,