பருவப் பெயர்ச்சி காலநிலை மற்றும் அனர்த்த அபாயம் தொடர்பில், மட்டக்களப்பில் கலந்துரையாடல்!

0
120

பருவப் பெயற்சி காலநிலை மற்றும் அனர்த்த அபாயம் தொடர்பான விசேட கலந்துரையாடல், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன் தலைமையில்
மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில், இடம் பெற்ற விசேட கலந்துரையாடல் நிகழ்வில், பிரதேச செயலாளர்கள்,துறைசார் அதிகாரிகள், அரச திணைக்கள
அதிகாரிகள், பொலிஸ் மற்றும் முப்படையினர் கலந்துகொண்டனர்
கடந்த 28 ஆம் திகதி முதல் இன்று வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் மற்றும் அதற்கான நடவடிக்கை தொடர்பாக
ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.