பலாங்கொடை ஓபநாயக்க – பாடியாவத்தை பகுதியில் தமது தந்தையினால் தாக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இன்று பதிவாகியுள்ளது.
உயிரிழந்தவர் 31 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இன்று அதிகாலை தந்தை மற்றும் மகன் ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் கைகலப்பாக மாறி, கொலையில்
முடிந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் 57 வயதான தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.