பல்கலைக்கழக மாணவர்களின் மகாபொல புலமைப்பரிசில் நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவை இந்த வாரத்துக்குள் மாணவர்களின் வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்படும் எனவும் கல்வி அமைச்சு அறிக்கை மூலம் அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் தலையீட்டின் மூலம் அரசாங்கத்தால் 31 கோடி ரூபா பணம் மகாபொல புலமைப் பரிசில் நிதியத்தில் இருந்து அவ்வாறே மகாபொல புலமைப்பரிசில் நன்கொடைக்காக வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பணம் மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய இரண்டு மாதங்களுக்குமான புலமைப்பரிசில் நிதியாக மாணவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு இந்த வாரத்துக்குள் வைப்பிலிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.