அடிப்படை வசதிகளை விரைவாக ஏற்படுத்தித் தருமாறும், இடநெருக்கடிக்குத் தீர்வு காணுமாறும் வலியுறுத்தி ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தீப்பந்தம் ஏந்தியவாறு பல்கலைக்கழக முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்கள் பல்கலைக்கழக வளாக பிரதான வீதிக்கு அருகில் கவனவீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு பின்னர் வளாகத்தினுள் ஊர்வலமாக தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 250 மாணவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, பல்வேறு கோசங்களை அவர்கள் எழுப்பினர்.
தமக்கு அடிப்படை வசதிகளை விரைவாக ஏற்படுத்தித் தருமாறும், போலித் தீர்வுகள் வேண்டாம், விடுதி வசதிகளை விரிவுபடுத்து, தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரையும் பல்கலைக்கழகத்தினுள் உடனடியாக அழைக்கவும், மாணவர்களை துன்புறுத்தாதே, மணவர்கள் மீதான அடக்குமுறைகளை நிறுத்து போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.