பல ஜனாதிபதி வேட்பாளர்கள், தமது சொத்துக்களை முறையாக வெளிப்படுத்தவில்லை எனவும், தேர்தலுக்கு செலவிடப்படும் நிதி தொடர்பில் ஆராயப்பட வேண்டும் எனவும், ஜனாதிபதி வேட்பாளரும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருமான ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பல ஜனாதிபதி வேட்பாளர்கள், தமது சொத்துக்களை முறையாக வெளிப்படுத்தவில்லை.
எனது சொத்துக்கள் அனைத்தையும் சரியாக வெளிப்படுத்தியுள்ளேன்.
40 முதல் 50 பில்லியன் ரூபாவை தேர்தலுக்காக செலவு செய்யும் கட்சிகளின் தலைவர்கள், குடியிருக்க வீடு மட்டுமே உள்ளது என்கிறார்கள்.
இவர்கள் ஒரு பொதுக் கூட்டத்திற்கு 30 இலட்சம் ரூபா செலவிடுகின்றனர்.
இந்த பணம் எங்கிருந்து வருகிறது என்பதை கண்டறிய வேண்டும்.
உலகம் முழுவதும் சென்று பல கோடி ரூபா பிச்சை எடுத்தாலும், இவ்வளவு பணம் செலவழிக்க முடியாது.
என ஜனாதிபதி வேட்பாளர் ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.