பளையில், உறக்கத்தில் இருந்த கணவன் மீது மனைவி மூர்க்கத்தனமாக தாக்குதல்!

0
245

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலோப்பளை பகுதியில் நேற்று அதிகாலை 5.00 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அதிகாலை வேளை உறக்கத்தில் இருந்த கணவன் மீதே மனைவி தாக்குதல் மேற்கொண்டுள்ளார் எனவும் கணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மனைவி மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கலாம் என சந்தேகித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பளை பொலஸார் மேற்கொண்டு வருகின்றனர்.