தலவாக்கலை பூண்டுலோயா பிரதான வீதியில் ஹொலிரூட் பகுதியில் காரொன்று இன்று (13) காலை வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
பூண்டுலோயா பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கி பயணித்த கார் ஒன்றே இவ்வாறு தலவாக்கலை பூண்டுலோயா பிரதான வீதியில் ஹொலிரூட் பகுதியில் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
காரில் பயணித்தவர்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை எனவும் கார் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.