பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளை வேட்டையாடுங்கள் என்று அமெரிக்க உளவுத்துறைத் தலைவர் துளசி கப்பார்ட் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலால் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டமை மிகுந்த வேதனை அளிப்பதாகவும், இந்த சந்தர்ப்பத்தில் இந்தியாவுக்குத் துணை நிற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் துளசி கப்பார்ட் கூறியுள்ளார்.