பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட ஹெரோயின்

0
125

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு வந்த உருளைக்கிழங்கு கொள்கலனின் குளிர்சாதனப் பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 500 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 10 கிலோ ஹெரோயின் போதைப்பொருளை, இலங்கை சுங்கப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த உருளைக்கிழங்குகளை இலங்கைக்கு கொண்டு வந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இந்தக் கடத்தலில் ஈடுபட்ட எஞ்சிய நபர்களைக் கண்டறிய விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.