பாடசாலைத் தரிசிப்புக்குச் செல்லும் கல்வி அதிகாரிகள்

0
82

பாடசாலைத் தரிசிப்புக்குச் செல்லும் கல்வி அதிகாரிகள், தங்கள் எல்லைகளைப் புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டியதுடன் அரசாங்கங்களின் எடுபிடிகளாக பிரசாரம் செய்வதை நிறுத்தி கல்வி விடயங்களில் அக்கறை செலுத்த வேண்டுமெனவும் இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் விடுத்துள்ள அறிக்கையிலையே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபர், ஆசிரியர்களின் உரிமைகளை மழுங்கடிக்க செய்யும் விதமான செயற்பாடுகளை நிறுத்தவேண்டும் எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.