பாடசாலை போக்குவரத்து தொடர்பில் பொலிஸார் விஷேட கவனம்!

0
199

நாளை (23) முதல் ஆரம்பமாவுள்ள மூன்றாம் தவணைக்கு பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்வதற்காக போக்குவரத்து முறைகளை பொலிஸ் ஒழுங்குபடுத்த உள்ளதாக பொலிஸ் ஊடப பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பாடசாலை ஆரம்பத்தின் போது வகுப்பறைகளின் நிலமைகள் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் கவனம் செலுத்துவதாகவும் பொலிஸாரும் அவர்களுக்கு ஒத்துழைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து வாகனங்கள் உரிய சுகாதார நடவடிக்கைகளுக்கு இனங்க செயற்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு செயற்படாவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.