பாடசாலை போக்குவரத்து பஸ்களில் இனி நடுத்தர வயது சாரதிகள்

0
105

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் ‘சிசு செரிய’ பஸ்களில் நடுத்தர வயதினரை மாத்திரமே சாரதிகளாக நியமிக்க இலங்கை போக்குவரத்து சபையின் விபத்து விசாரணை முகாமையாளர் எரந்த பெரேரா தீர்மானித்துள்ளார்.

மாணவர்களின் பாதுகாப்பை மாத்திரம் கருத்தில் கொண்டு குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் சில இளம் சாரதிகள் பொறுப்பற்ற முறையில் வாகனங்களை செலுத்துவதை அவதானித்த நிலையில் சிறுவர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இது குறித்து நாடளாவிய ரீதியில் உள்ள ஒவ்வொரு டிப்போ அத்தியட்சகருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான முறையான பயிற்சி மற்றும் அனுபவமுள்ள சாரதிகள் மற்றும் உதவியாளர்களை நியமிக்குமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.