மட்டக்களப்பு காத்தான்குடி மத்திய கல்லூரி தேசியப் பாடசாலை மாணவ தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி செயலமர்வு அக்கல்லூரியின் 2000ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதரண தர வகுப்பு பழைய மாணவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்றது.
விணைத்திறன் மிக்க ஆளுமையான மாணவ தலைவர்களை உருவாக்கும் திட்டத்தின் கீழ் இவ் செயலமர்வு நடாத்தப்பட்டது.
அஷ்ஷெய்க் என்.எம்.அமீன் நழீமி தலைமையில் நடைபெற்ற செயலமர்வில் பழைய மாணவர்கள் குழுவின் தலைவர் பொறியியலாளர் ஏ.எல்.எம்.றிசாட் விரிவுரைகளை நடாத்தியதுடன் மாணவ தலைவர்களுக்கு இருக்க வேண்டிய பண்புகள் மற்றும் தலைமைத்துவம் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் விளக்கமளித்தார்.
நிகழ்வில் பழைய மாணவர்கள் குழுவின் செயலாளர் செயலாளர் டாக்டர் முகம்மட் சனீஜ் பொருளாளர் முகம்மட் பயாஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.