பாண்டிருப்பில் கடற்கரையில் கைவிடப்பட்ட நிலையில் துப்பாக்கி ரவைகள் மீட்பு

0
168

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு கடற்கரைப்பகுதியில் பிளாஸ்டிக் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கரையொதிங்கிய துப்பாக்கி ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடற்படையினருக்கு இன்று முற்பகல் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது குறித்த துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டது.

மேலும் கைப்பற்றப்பட்ட ரவைகளை கல்முனை பொலிசாரிடம் ஒப்படைப்பதற்கான பணியினை கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர்.