அம்பாறை மாவட்டம் காரைதீவில் பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தினால் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான பயிர் விதைகளும் நிதியுதவியும் வழங்கப்பட்டது.
வீட்டுத் தோட்டம் செய்வதை ஊக்குவிக்கும் முகமாக தெரிவு செய்யப்பட்ட 17 குடும்பங்களுக்கு பயிர் விதைப் பொதிகளும் தலா 10,000 ரூபா வீதம் வழங்கி வைக்கப்பட்டது.
காரைதீவு பிரதேச செயலாளர் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் எஸ்.பார்ததிபன், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் பி.ராஜகுலேந்திரன், பாதிப்புற்ற பெண்கள் அரங்க உத்தியோகஸ்தர்கள் வ.இந்திராணி ச.அன்னலெட்சுமி.காரைதீவு பிரதேச செயலக மகளீர் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஜெனிதா மோகன், மகளீர் அபிவிருத்தி வெளிக்கள உதவியாளர்கள் கலந்து கொண்டார்கள்.அம்பாறை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதிப்புற்ற பெண்களுக்கு இவ் உதவி வழங்கப்படவுள்ளதாக நிகழ்வின் போது பெண்கள் அரங்க உத்தியோக ஸ்தர் வ.இந்திராணி தெரிவித்தார்.