பாதுகாப்பற்ற கிணற்றிலிருந்து 3 வயது சிறுவனின் சடலம் மீட்பு

0
5

சம்மாந்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில், பாதுகாப்பற்ற கிணற்றிலிருந்து 3 வயது சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. காவல்துறைக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

அப்பகுதியிலுள்ள பாதுகாப்பற்ற நிலையிலிருந்த கிணற்றை சோதனை செய்த பின்னர் இ சிறுவன் நீரில் மூழ்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறுவன் சம்மாந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.