பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில்தமிழ், சிங்கள புத்தாண்டு நிகழ்வு

0
138

தமிழ் சிங்களப் புத்தாண்டு நிகழ்வு, பாதுகாப்பு அமைச்சின் நலன்புரிப் பிரிவின் ஏற்பாட்டில் பத்தரமுல்லையில் உள்ள பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் நேற்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டார்.
சம்பிரதாயங்களுக்கு முன்னுரிமை அளித்து புத்தாண்டு கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்போது பாரம்பரிய விளையாட்டுகள், பாதுகாப்பு அமைச்சு ஊழியர்களின் கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
புத்தாண்டு விழா நடைபெறும் வளாகத்திற்கு சென்ற ஜனாதிபதிக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் ஓய்வுபெற்ற கமல் குணரத்னவால் வரவேற்பளிக்கப்பட்டதோடு, புத்தாண்டு அழகி போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்றவர்களுக்கு ஜனாதிபதி பரிசுகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.