பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து அரசாங்கமானது உள்ளூராட்சிமன்ற தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உள்ள10ராட்சிமன்ற தேர்தல்களுக்காக 339 வேட்புமனுக்களை நாம் தாக்கல் செய்துள்ளோம்.
வட மாகாணத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் பல இரத்து செய்யப்பட்டுள்ளன. எனினும், 336 வேட்புமனுக்களுக்காக போட்டியிடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர்பார்த்துள்ளது.