பாரவூர்திகள் இரண்டு மோதியதில் கோர விபத்து -48 பேர் உயிரிழப்பு

0
66

எரிபொருள் ஏற்றிச் சென்ற பாரவூர்தி மீது மற்றொரு பாரவூர்தி மோதிய கோர விபத்தில் 48 பேர் உயிரிழந்தனர். 

நைஜீரியா – அகெயி நகரில் உள்ள நெடுஞ்சாலையில் எரிபொருள் ஏற்றிச் சென்ற பாரவூர்தி மீது, அவ்வீதியின் எதிரே வேகமாக வந்த மற்றொரு பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளானது. 

இந்தக் கோர விபத்தில் 2 பாரவூர்திகளும் வெடித்துச் சிதறின. 

இச்சம்பவத்தில் 48 பேர் உயிரிழந்தனர். 

மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

இந்த விபத்து குறித்துத் தகவலறிந்த தீயணைப்பு மீட்புக்குழுவினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று, படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். 

மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.