பாராளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை

0
117

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றி வருகின்றார்.

பொருளாதார பிரச்சினை, நிதி பிரச்சினை, சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தங்கள் தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு இருந்தன.

இவ்வாறு எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கவே நான் முயலுகின்றேன்.

2022 ஜூலை மாதத்தில் பல கலவரங்கள், அதேபோன்று அரசாங்க வங்குரோத்து நிலைமைக்கு நாம் முகங்கொடுத்தோம்.

எனவே இலங்கை மீதான நம்பிக்கை இழக்கப்பட்டது.

எட்டு மாதங்களுக்கு பிறகு எமது பொருளாதாரத்தை திசைத்திருப்பும் முயற்சியில் இருக்கின்றோம்.

இது சிறப்பான பயணத்தில் பயணித்துக்கொண்டு இருக்கின்றது என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.