பயண இணையத்தளமான Big 7 Travel வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகள் மற்றும் பார்வையாளர்களை கவர்ந்த நாடுகளின் பட்டியலில் 50 நாடுகள் பெயரிடப்பட்டிருந்தன.
இந்தப் பட்டியலில் இலங்கை 13வது இடத்தைப் பெற்றுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் வருகை, சுவையான உணவுகள், அழகிய கடற்கரைகள் மற்றும் காலத்தால் அழியாத கலாச்சார இடங்கள் போன்றவை இலங்கையில் சிறந்து விளங்குவதாக இதன்போது குறிப்பிடப்பட்டுள்ளது.