பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்பதற்காக தாய்லாந்து நாட்டு பிரதமர் இலங்கைக்கு விஜயம்

0
134

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் கொழும்பில் நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்பதற்காக தாய்லாந்து நாட்டின் பிரதமர் பிரயுத் சான் ஓசா இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று (21) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.