பிரச்சினைகளை கூறுவதை மட்டுமே அரசாங்கம் செய்கின்றது – விஜித ஹேரத்

0
275

மின்வெட்டு தொடர்பில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துக்களை கூறுகின்றனர். எனினும் நாட்டு மக்கள் பாரிய தயக்கத்துடன் உள்ளனர். இவற்றில் டொலர் பிரச்சினையும் ஒன்று என்று தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

துறைமுகங்ளுக்கு வந்துள்ள எண்ணெய் கப்பல்களை இறக்கிக்கொள்ள வழியில்லாமல் உள்ளது. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மின்னுற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் இல்லை. தற்போதைய நிலையில் கொலன்னாவையில் எரிபொருள் தீர்ந்து வருகின்றது. மீண்டும் பெப்ரவரி மாதமே எரிபொருள் தாங்கிய கப்பல் வரும்.

மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என்று கூறுகின்றனர். எனினும், நாளை வரை மட்டுமே மின்வெட்டை அமுல்படுத்தாமல் இருக்க முடியும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். பாரிய பிரச்சினை ஒன்று உள்ளது.

அதேபோன்று நீர்மின் உற்பத்தியும் நெருக்கடியில் உள்ளது. இந்த அரசாங்கத்திடம் எந்தத் தீர்வும் இல்லை. மக்களிடம் பிரச்சினைகளைக் கூறுவதை மட்டுமே அரசாங்கம் செய்கின்றது.

ஒவ்வொரும் ஒவ்வொரு மூடக்கதைகளைக் கூறுகின்றனர்.

மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான திட்டம் அரசிடம் இருக்க வேண்டும்.

இந்தப் பிரச்சினைகள் காரணமாக மக்கள் தற்போது நம்பிக்கையை இழந்துள்ளனர். அரசாங்கம் தற்போது எல்லாவற்றையும் மட்டுப்படுத்தக் கூறுகின்றது. எல்லாவற்றையும் சிக்கனமாக பயன்படுத்துமாறு அரசாங்கம் கூறுகின்றது. இதனை கூறுவதற்கு அரசாங்கம் ஒன்று தேவையில்லை.

இன்று சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனுமே வெளிநாட்டுப் பயணிகள் நாட்டுக்கு வருகை தருகின்றனர். இதன் காரணமாக சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்ய முடியாது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.