பிரதமர் அலுவலகத்திற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்தமை : பிணையில் விடுவிக்கப்பட்டவர்களுக்கு பிடியாணை

0
120
பிரதமர் அலுவலகத்திற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்தமை தொடர்பான வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த 3 சந்தேக நபர்களுக்கு கோட்டை நீதவான் திலின கமகே இன்று பிடியாணை பிறப்பித்துள்ளார்.நீதிமன்றில் முன்னிலையாக தவறியதன் காரணமாக குறித்த மூவருக்கும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை அறிக்கைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 22ஆம் திகதி அழைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் குறித்த விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்த குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தினர் சான்றுப் பொருட்களைக் கொண்டுவருவதற்குத் தேவையான இரசாயன பகுப்பாய்வு அறிக்கையின் பிரதிகளை தாக்கல் செய்வதற்கு நீதிமன்றத்திடம் அனுமதி கோரினர்.சம்பவம் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பலாங்கொட காஷ்யப தேரர் மற்றும் சமூக ஆர்வலர் பிரியத் நிகேஷல உள்ளிட்ட 11 சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றில் முன்னிலையாகினர்.