பிரபல அமெரிக்கப் பாடகர் அல்லோய் பிளாக் இலங்கை வருகை!

0
8

பிரபல அமெரிக்கப் பாடகர் அல்லோய் பிளாக் மூன்று நாள் சுற்றுப்பயணமாக இலங்கை வருகைதந்துள்ளார்.
அவர் இன்று காலை தோஹாவிலிருந்து கட்டார் ஏர்வேஸ் விமானத்தினூடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் கோமிகா உடுகமசூரியவின் அழைப்பின் பேரில் அவர் நாட்டுக்கு வருகைதந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.