கண்டி டி. எஸ். சேனநாயக்கா வித்தியாலயத்தின் பாதுகாப்பு தடுப்பு சுவரின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் பல வகுப்புக்கள் சேதமடைந்துள்ளன.நேற்று (08) இரவு பெய்த கடும் மழையுடன் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
தற்போதைய நிலையில் ஏனைய 27 வகுப்புகளும் தற்போது ஆபத்தான நிலையில் இருப்பதாக அதிபர் ஆனந்த உபதிஸ்ஸ குறிப்பிட்டார்.அந்தப் பாடசாலையின் ஆரம்பப் பிரிவில் உள்ள அனைத்து வகுப்புகளும்இ ஏனைய பல வகுப்புகளும் ஆபத்தான நிலைமையில் உள்ளன.
இன்று (09) இரவு கடும் மழை பெய்தால் மேலும் பல வகுப்புகள் பாதிக்கப்படலாம் எனவும் பாடசாலையின் அதிபர் குறிப்பிட்டார்.தற்போதுள்ள அபாயம் குறித்து மத்திய மாகாண ஆளுநர் உட்பட அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும்இ எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு அமைய மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.