பிரித்தாளும் நடவடிக்கையில் ஜனாதிபதி:பா.அரியநேத்திரன்

0
125

ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் அளிக்கும் வாக்குகள் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும் என தமிழ் பொது வேட்பாளர் என பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
ஒரு மாவட்டத்துக்குள்ளே ஒரு கட்சியில் உள்ளவர்களை பிரித்தாளும் நடவடிக்கையை தற்போதைய ஜனாதிபதி முன்னெடுத்து வருகின்றார் எனவும்
தொடர்ந்து 08 ஜனாதிபதிகளால் நாம் ஏமாற்றப்பட்டதன் விளைவே தமிழ் பொது வேட்பாளர் என பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் முல்லைத்தீவில் நேற்று மாலை இடம்பெற்றது.
முல்லைத்தீவு வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் முதலாவது தேர்தல் பரப்புரை கூட்டம் இடம்பெற்றது.
முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்லம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், என்.சிறிகாந்தா, சிவசக்தி ஆனந்தன், யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன், ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன், உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், அரசியல் ஆய்வாளர்களான நிலாந்தன், யதீந்திரா, பொதுமக்கள் பங்கேற்றனர்.