பிறப்புச் சான்றிதழ் இல்லாத நபர்களுக்கு தேசிய அடையாள அட்டை (என்ஐசி) வழங்கும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்தினால் இந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி, திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்தினால் அனைத்து பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கு தேவையான தகவல்களுடன் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.சுற்றறிக்கையின்படி, 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 40 வயதுக்குட்பட்டவர்கள் அடிப்படையில் என்ஐசி வழங்குவதற்கு இரண்டு தனித்தனி நடைமுறைகள் பின்பற்றப்படும்.