பிள்ளைகள் போதைப்பொருள் பாவனை: பெற்றோரின் கவனயீனமும் காரணம்!

0
192

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியில் சர்வதேச புகைத்தல் மற்றும் மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகம் மற்றும் பிரதேச செயலக
சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில் கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் அனுசரணையில் ‘புகைத்தலில் இருந்து மீண்ட ஒரு கிராமம்’ எனும் தொனிப்பொருளில்
மாபெரும் எதிர்ப்பு பேரணி நடைபெற்றது.
பேரணி தொடர்பில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம்.நசீர் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பில் கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் நிர்வாக பணிப்பாளர் தபாலதிபர் யூ.எல்.எம்.பைசர் மற்றும் சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் றியாத் ஏ.மஜீத் ஆகியோர் கலந்து கொண்டனர்.