பீடி இலைகளுடன் லொறியை கடத்திச் சென்றதாக பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
புத்தளம் பகுதியில் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஆனமடுவ மற்றும் வெலசிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதுடன் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் பெறுமதி இரண்டு கோடி ரூபா என தெரியவந்துள்ளது .
இந்தச் சம்பவத்தில் மற்றுமொரு பொலிஸ் அதிகாரியை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வேனில் வந்த சந்தேகநபர்கள் பீடி இலைகள் கொண்டுவரப்பட்ட லொறியின் சாரதியை கடத்திச் சென்று தாக்கி பணம் மற்றும் கைத்தொலைபேசிகளை கொள்ளையடித்துவிட்டு பீடி இலைகளுடன் லொறியை கடத்திச்சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது .