Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
இந்த வருடம் வைத்தியர்களாக நியமிக்கப்பட்ட 1,300 பேரில் 100 பேர் சுகாதாரத் துறையில் வேலை பெற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.நியமனம் செய்யப்பட்ட சுமார் 50 வைத்தியர்கள் நியமனக் கடிதங்களை பெற்றுக் கொள்ள வரவில்லை எனவும் சுமார் ஐம்பது பேர் நியமனக் கடிதங்களை ஏற்று பணிக்கு சமூகமளிக்கவில்லை எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார் .இதே நிலை நீடித்தால், எதிர்காலத்தில் சுகாதாரத் துறை கடுமையான நெருக்கடிக்கு ஆளாவதை தவிர்க்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்மருத்துவ சேவையில் இணைந்துகொள்ளும் வைத்தியர் ஒருவரின் அடிப்படை சம்பளம் 54,000 ரூபா எனவும் அதற்கமைய அவரின் நாளாந்த சம்பளம் சராசரி 2000 ரூபா ஆகும். இந்த குறைந்த வருமானத்தை பெற வைத்தியர்கள் விரும்பாத நிலையில் அவர்கள் மருத்துவ துறையில் நிலைத்து நிற்பார்கள் என நம்பிக்கை இல்லை எனவும் வைத்தியர் ஹரித அலுத்கே மேலும் தெரிவித்துள்ளார் .விசேட வைத்தியர்கள் உட்பட பெருமளவான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதால் ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம், தெஹியத்தகண்டிய போன்ற வைத்தியசாலைகளின் பிரிவுகள் மூடப்பட்டுள்ளதாகவும் முல்லைத்தீவு வைத்தியசாலையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் டொக்டர் ஹரித அலுத்கே மேலும் தெரிவித்துள்ளார். வைத்தியர்களின் மதிப்பைக் கருத்திற் கொண்டு மருத்துவர்களின் சம்பளம் வழங்கப்பட வேண்டும், சுகாதாரத் துறையைப் பாதுகாக்கும் முறையை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் வைத்தியர் ஹரித அலுத்கே மேலும் தெரிவித்துள்ளார் .