ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியிலிருந்து விலகி புதிய லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சி.அகிலதாஸ் தெரிவித்துள்ளார்.
புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் காரியாலய திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டின் நெருக்கடிளை தீர்ப்பதாகக் கூறியே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார். எனினும் இன்று ஒரு இறாத்தல் பாண் யாழ்ப்பாணத்தில் 200 ரூபாய்க்கும் கொழும்பில் 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் நிலைமையே காணப்படுகின்றது என்று வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சி.அகிலதாஸ் தெரிவித்துள்ளார்.