புதிய விலைகளை அறிவித்தது டொயோட்டா லங்கா!

0
7

வாகன இறக்குமதிக்கான தடை தளர்த்தப்பட்டதை அடுத்து டொயோட்டா லங்கா தனது புதிய வாகனங்களுக்கான விலைகளை அறிவித்துள்ளது. மாற்று விகிதம் தீர்வைகள் மற்றும் வரிகளில் ஏற்ற இறக்கங்களுக்கு அமைய இந்த விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி ஆகக்குறைந்த பட்சமாக டொயோட்டா லைட் ஏஸ் வெற் வரி உட்பட 7.45 மில்லியன் ரூபாய் என்ற விலையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 300 வெற் வரி உட்பட ரூ.118 மில்லியன் என்ற விலையில் விற்பனைக்கு வர இருக்கிறது.இதற்கிடையில் டொயோட்டா ரேய்ஸ் விலை ரூ .12.25 மில்லியன்.

புதிய டொயோட்டா விகோ கார் ரூ.9.15 மில்லியன் டொயோட்டா பிரையஸ் காரின் விலை 28.9 மில்லியன் ரூபாய். டொயோட்டா கொரொலா க்ரொஸ் கார் 35.5 மில்லியன் ரூபாய். டொயோட்டா கேம்ரி 44 மில்லியன் ரூபாய். டொயோட்டா யாரிஸ் கிரொஸ் கார் 21.15 மில்லியன் ரூபாய். டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 250 கார் ரூ.75 மில்லியன். டொயோட்டா ஹியாஸ் ரூ.19.95 மில்லியன்