புதுக்குடியிருப்பில் தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் அறிமுக கூட்டம்

0
148

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, துணுக்காய், மாந்தை கிழக்கு, கரைதுறைப்பற்று ஆகிய நான்கு பிரதேச சபைகளுக்கும் போட்டியிடுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் அறிமுக கூட்டம் புதுக்குடியிருப்பில் இடம்பெற்றது. இதன்போது கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களின் உரைகளும் இடம்பெற்றன. கூட்டத்தில் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ந.சிறிகாந்தா, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மற்றும் வடமாகாண முன்னாள் விவசாய அமைச்சர் சிவனேசன் உள்ளிட்டவர்களின் உரைகள் இடம்பெற்றன.