புதுநகர் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில்
கேதார கௌரி விரத பூஜைகள்

0
251

கேதார தேவியின் கௌரி விரதத்தினை இந்து அடியார்கள் கடந்த 21 நாட்கள் உபவாசம் இருந்து விரதம் அனுஸ்டித்து அனைத்து இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று விரதத்தின் இறுதி நாளான இன்றைய தினம் விரத காப்புக்கட்டும் நிகழ்வுகள் மிக பக்தி பூர்வமாக இடம்பெற்றது

மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு புதுநகர் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் கேதார கௌரி விரதத்தின் இறுதி நாள் விரத பூஜை வழிபாடுகள் ஆலய பிரதம குரு இளஞ்சுடர் சிவஸ்ரீ சபா ரத்தினம் குருக்களின் தலைமையில் இன்று காலை இடம்பெற்ற விநாயகர் பூஜை வழிபாடுகளுடன் அம்பாளுக்கான அபிஷேக
பூஜையுடன் கேதார கௌரி விரத காப்பு கட்டும் நிகழ்வுகள் நடைபெற்றது.

இதேவேளை கடந்த 21 வருடங்கள் மட்டக்களப்பு புதுநகர் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் ஒரே குருக்களாக இருந்து பூஜை வழிபாடுகளை செய்து வரும் ஆலய பிரதம குரு இளஞ்சுடர் சிவஸ்ரீ சபா ரத்தினம் குருக்கள் 21 வருடங்கள் கேதார தேவியின் கௌரி விரத பூஜை வழிபாடுகளை செய்த ஓரே குருக்களாக சபா ரத்தினம் குருக்களை கேதார தேவியின் கௌரி விரதத்தினை அனுஷ்டிக்கும் அடியார்கள் ஆலய நிர்வாக சபையுடன் இணைந்து பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு செய்தனர்

21 நாட்கள் உபவாசம் இருந்து விரதம் அனுஸ்டித்து அடியார்கள் கேதார தேவியின் கௌரி விரதத்தினை நிறைவு செய்யும் இன்றைய தினம் காலை இடம்பெற்ற கும்பம் சொறிதலுடன் பாராயணம் செய்து விரதத்தினை நிறைவு செய்தமை குறிப்பிடத்தக்கது.