அநுராதபுரம் – கெக்கிராவ பகுதியில் இடம்பெற்ற புத்தாண்டு நிகழ்வில் பங்கேற்ற 10 வயதான சிறுவன் ஒருவன் உயிரிழந்தான்.
15 வயதான தனது சகோதரருடன் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்றிருந்த குறித்த சிறுவன் ஓடிக்கொண்டிருந்த நிலையில் கீழே வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் அவர் கலாவௌ வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபோது உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.